திரைப்படம் : மயக்கம் என்ன?
பாடலாசிரியர் : செல்வராகவன், தனுஷ்
என்னென்ன செய்தோம் இங்கு
இதுவரை வாழ்விலே...
எங்கெங்கு போனோம் வந்தோம்
விதி என்னும் பேரிலே...
காணாத துயரம் கண்ணிலே
ஓயாத சலனம் நெஞ்சிலே...
இறைவா.....!
சில நேரம் எண்ணியதுண்டு...
உன்னை தேடி வந்ததமுண்டு...
சன்னதியில் சனனம் வெல்லுமா..?
இறைவா.....!
அன்பான புன்னகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீயென்பது நானல்லவா
விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள்நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்...
வாழ்க்கையின் பொருள்தான் என்ன
வாழ்ந்துதான் பார்த்தால் என்ன
கதை சொல்கிறாய்
பயம் கொள்கிறாய்
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
உனது அரசாங்கம் பெருங்காடு
உலகம் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை அணைத்துக்கொண்டு
உள்ளம் மருகி நின்றால்
சூடும் தீயும் சுகமாய் தீண்டிடும்
இறைவா.....!
சில நேரம் எண்ணியதுண்டு...
உன்னை தேடி வந்ததமுண்டு...
சன்னதியில் சனனம் வெல்லுமா..?
இறைவா.....!
உள்ளிருக்கும் உன்னை தேடி
ஓயாமல் அலைவோர் கோடி...
கருவறையா நீ கடலலையா.....?
மலைகள் ஏறி வரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்...
மலைகள் ஏறி வரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்...
என்னில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் எவரின் பின் ஓடுகிறோம்...
கண்ணை பார்க்க வாய்த்த
கல்லை பேச வாய்த்த
பெருந்தாயின் கருணை மறக்கிறோம்...
இறைவா.....!
சில நேரம் எண்ணியதுண்டு...
உன்னை தேடி வந்ததமுண்டு...
சன்னதியில் சனனம் வெல்லுமா..?
இறைவா.....!
அன்பான புன்னகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீயென்பது நானல்லவா
விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள்நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்...
வீழ்வது நாமாகிலும், வாழ்வது தமிழாகட்டும்!!!
தமிழை வாழ வைக்கும் தமிழனை வாழ வைப்பது எப்படி என்ற சிந்தனையோடு,
விஸ்வநாத் கலிய மூர்த்தி
எவனொருவன்
தலையில் கங்கையை ஏந்தி
பிறை சூடி
மிடறினில் நஞ்சடக்கி
புலித்தோல் உடுத்தி
உடுக்கை அடித்து
சுடுகாட்டு சாம்பல் அணிந்து தின்று
தாண்டவம் ஆடுகிரானோ
அவனுக்கே என் உயிர் சமர்ப்பணம்.
தலையில் கங்கையை ஏந்தி
பிறை சூடி
மிடறினில் நஞ்சடக்கி
புலித்தோல் உடுத்தி
உடுக்கை அடித்து
சுடுகாட்டு சாம்பல் அணிந்து தின்று
தாண்டவம் ஆடுகிரானோ
அவனுக்கே என் உயிர் சமர்ப்பணம்.