Happy Valentines Day...
இதயம் பேசும் இரட்டை துடிப்பில்
ஒற்றை பெயர் கேட்டால் -
மெல்லியதாய் பைத்தியமாம்.
நடை பாதை நேரங்கள் யாவும்
மிதப்பதாய் இருந்தால் -
மெல்லியதாய் பைத்தியமாம்.
முரட்டுக் காளை இரும்பு வீரன்தான்
கவிதை பாடினால் -
மெல்லியதாய் பைத்தியமாம்.
எதிரே எவரையோ மோதி தலை
சொறிந்துச் சென்றால் -
மெல்லியதாய் பைத்தியமாம்.
தாயவள் திட்டும்போதும் சிரிப்பை
அள்ளி தெளித்தால் -
மெல்லியதாய் பைத்தியமாம்.
சாலையோர பூக்கள் எல்லாம்
அழகாய் தெரிந்தால் -
மெல்லியதாய் பைத்தியமாம்.
யாத்தே,
இந்த பைத்தியமே,
உள்ளே புகுந்து,
உயிரணுவில் கலந்து,
உன்னை புனிதமடயச்செய்யுமே..
உலகே நிற்கிறதே
உயிரில் கரைகிறதே
இந்த பைத்தியம் மிகவும் இனிக்கிறதே
இதுதான் காதல் என்கிறதே...
காதல் தின வாழ்த்துக்கள் ...!!!
நேசமுடன்,
விஸ்வநாத் கலியமூர்த்தி.
No comments:
Post a Comment
To fill your thoughts...